நவீன சிகிச்சையில் ஹண்டே மருத்துவமனை புரட்சி.
குறைந்த வலியுடன் எளிமையான சிகிச்சைக்கு உதவும் லேசர் - மைக்ரோவேவ் அப்லேஷன் கருவிகள்! குறைந்த வலியுடன் மிக எளிமையான பெரிய அளவில் வடுவற்ற மிகச் சிறந்த சிகிச்சைக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் நவீன மருத்துவக் கருவிகள் வாயிலான சிகிச்சையைத் தொடங்கியுள்ளது ஹண்டே மருத்துவமனை . சென்னை ஷெனாய் நகரில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுச் செயல்பட்டு வரும் இது . முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் எச் . வி . ஹண்டே அவர்களால் தொடங்கப்பட்ட மருத்துவமனை ஆகும் . இங்கு சிறந்த சிகிச்சைக்காக வாங்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கருவிகள் குறித்து டாக்டர் கிருஷ்ணா ஹண்டே கூறியதாவது : நோய்கள் பலவாறு வலிகளைக் கொடுத்தாலும் அதற்கான சிகிச்சைகள் மிக எளிதாக குறைந்த வலியுடன் கூடியதாக இருக்க வேண்டும் . அத்தகைய நோக்கத்திற்காக எங்கள் மருத்துவமனையில் புதிதாக லேசர் (Laser) மற்றும் மைக்ரோவேவ் அப்லேஷன் (Microwave Ablation) ஆகிய இரண்டு நவீன சிகிச்சைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன . பல்வேறு சிகிச்சைகளுக...